ஸ்வேதா நதியை தூர்வார வேண்டும்
சேலம் மாவட்டம் கங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி ஸ்வேதா நதி என்று அழைக்கப்படும் ஆற்றுப்பகுதியை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளனர்
தம்மம்பட்டி ஸ்வேதா நதி என்று அழைக்கப்படும் ஆற்றுப்பகுதியில் ஏற்கனேவே சிவன் கோயில் பின்புரம் உள்ள கட்டப்பட்டுள்ள நீர்தேக்க தடுப்பு அணை பழுதடைந்து உடைத்து உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும் மேலும் இந்த ஆற்றுப்பகுதியில் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இனி மழை காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆற்று பகுதியை உடனடியாக தூர்வாரி விவசாய நிலத்திற்கு நீர் பாசனம் செல்ல வழிவகை செய்ய வேண்டும்
எனவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் உரிமை மையத்தின் மாநில இயக்குனர் கே.பழனிவேல், வேண்டுகோள் விடுத்துள்ளனர்
உடனடியாக எங்களுடைய
ReplyDeleteசுவேத நதியை தூர்வாறூமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்