திமுக அரசை கண்டித்து திருச்சியில் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு
திருச்சி, அக்.3: அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் திமுக அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்,
வருகின்ற 8.10.2024, செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள பகுதி கழகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
அதன்படி ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்காவல் பகுதி, முசிறி நகரம், துறையூர் நகரம், சிறுகமணி பேரூராட்சி, மண்ணச்சநல்லூர் பேரூராட்சி, ச.கண்ணனூர் பேரூராட்சி, தொட்டியம் பேரூராட்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி, மேட்டுப்பாளையம் பேரூராட்சி, தா.பேட்டை பேரூராட்சி, உப்பிலியபுரம் பேரூராட்சி, பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.
அது சமயம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கழக முன்னோடிகள், தலைமை கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளை கழக செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விடியா தி.மு.க அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி ,அறிக்கையில் தெரிவித்துள்ளார்