திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி, ஜன.10: 2025-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 10-ம் நாள் (10.01.2025) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு) நடைபெறும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை ஆணையிடுதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், அறிக்கை வெளியீட்டு உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு) நடைபெறும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 10.01.2025 (வெள்ளிக் கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை வழங்கியும், இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் ஏற்கனவே கடந்த 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு எதிர்வரும் 17.01.2025 அன்று அரசு விடுமுறை நாளாகவும், அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 10.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு எதிர்வரும் 01.02.2025 அன்று பணி நாளாக அறிவித்து ஆணையிடப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.