பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் சார்பில் கோரிக்கை
![]() |
துணை ஜனாதிபதியாக ஜி கே வாசன் அவர்களை நியமிக்க அகில பாரத பார்க்கவ குல சங்கம் கோரிக்கை.
திருச்சி, ஆகஸ்ட், 2: மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மாண்புமிகு ஜெ பி நட்டா அவர்களுக்கு எனது கோரிக்கை
ஐயா வணக்கம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
கடந்த ஜூலை மாதம் இருபத்தி ஏழாம் தேதி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் வந்து தமிழர்களையும் தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளையும் உலகிற்கு எடுத்துக் கொள்ள கொள்ள காட்டியமைக்கும் மஹா சக்கரவர்த்தி உடையார் ராஜேந்திர சோழன் அவர்களின் பராக்கிரமத்தை பறைசாற்றியமைக்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் ஐபிபிஎஸ் என் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
கடந்த நூற்றாண்டின் இறுதியில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்த வேளையில் மக்கள் தலைவர் ஐயா ஜி கே மூப்பனார் அவர்களுக்கு பிரதமர் கிடைக்காமல் கைநழுவி போனதை வருத்தத்துடன் பலமுறை உங்கள் உரையிலும் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் உரையிலும் குறிப்பிட்டுள்ளீர்கள்
இந்த சூழ்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் வருகிறது ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணம் எண்பது லட்சம் மக்கள் தொகையை பார்க்கவா குலத்திற்கும் எட்டரை கோடி தமிழர்கள் விரும்புவது இயற்கை
எனவே மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு உள் அமைச்சர் அவர்களுக்கும் எங்கள் பணிவான வேண்டுகோள்
மக்கள் தலைவர் ஐயா ஜி கே மூப்பனார் அவர்களின் அரசியலில் நேர்மை எளிமை வெளிப்படைத்தன்மை கொண்டு கர்மவீரர் காமராஜர் வழியில் அடியொற்றி நடக்கும் மக்கள் தளபதி ஐயா ஜி கே வாசன் எம் பி அவர்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு தமிழனுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நீங்கள் தமிழர்கள் பால் கொண்ட மதிப்பு மரியாதை வெளிப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
தொழிற்கல்வி பொறியியல் மருத்துவம் விண்வெளி என்று பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி வரும் பெரம்பலூர் முன்னாள் மக்களவை உறுப்பினர் கல்வி வள்ளல் எஸ் ஆர் எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களையும் துணை ஜனாதிபதி பதவிக்கு அல்லது மத்திய அரசு ஏதாவது ஒன்று மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து தனிப்பொறுப்புடன் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கி ஐயா அவர்களின் கவுரவிக்க வேண்டும்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடலாசிரியர் நடிகர் இசையமைப்பாளர் பாடகர் என அஷ்டாவதானியாக விளங்கும் திரு டி ராஜேந்தர் அவர்களின் திறமையை அங்கீகாரம் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும்
தமிழ்நாடு மக்களின் சார்பில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரு மனதாக பரிந்துரை செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
திருமலை எம் ரவி பார்க்கவன் பிஏ நிறுவனர் மற்றும் தலைவர் அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் .இவ்வாறு தெரிவித்துள்ளார்.