லாரி கவிழ்ந்து விபத்து

 திருச்சி அரியமங்கலத்தில் இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.


திருச்சி, நவ:                               அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள இரும்பு பைப்பு குடோனில் இருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி புறப்பட்டது.


இதனை திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம்பேட்டையை சேர்ந்த பிரபுஎன்பவர் ஓட்டி வந்தார்.


அந்த லாரியானது அரியமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் பகுதி அருகே வந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில்  செல்ல முற்பட்டபோது அந்தப் பகுதியில் உள்ள சாலை ஏற்றத்தின் காரணமாகவும், லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பைப்புகளை ஏற்றி சென்றதாலும் அந்த லாரியானது லோடு இழுக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. பின்னர் லாரி பின்புறம் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அங்குள்ள குடியிருப்பு வாசிகளும்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 


இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான லோடுகளை ஏற்றி செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுகின்றன, இதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விதிகளை மீறி அதிகம் பாரம் ஏற்றி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form