நவம்பர் 7 புரட்சி தினம்

நவம்பர் 7 புரட்சி தினத்தில் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றி சிறப்பித்தனர்


திருச்சி, நவ, 7:     ,                                இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி  நவம்பர் 7 புரட்சி தினத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் சிவா அவர்கள் 25 வது வார்டு கிளை கட்சி கொடியினை ஏற்றி துவக்கி வைத்தார்.


காலை 7 மணிக்கு 25 வது வார்டு செயலாளர் சுமதி தலைமையிலும் 

8 மணிக்கு 22 ஆவது வார்டு  சசிவர்ணம் தலைமையிலும் 8 15 க்கு 11வது வார்டு நீதிபதி தலைமையிலும் 8.30 க்கு 10 வது வார்டு . ரவீந்திரன் தலைமையிலும் 8:45 க்கு 9 ஆவது வார்டு .ஆனந்தன் தலைமையிலும் 9 மணிக்கு 8 வது வார்டு சரண்சிங் தலைமையிலும் 8 வது வார்டு முஸ்லிம் தெருவில்  ரபீக் தலைமையிலும் 9:15 க்கு 23 வது வார்டு வை. புஷ்பம்  தலைமையிலும் 9:30 க்கு 26 வது வார்டு பல்கீஸ் சுபேதா தலைமையிலும் மேலும் கிளைச் செயலாளர்கள் பகுதி குழு உறுப்பினர்கள் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.


மேற்குப் பகுதி குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் வெகுஜன அமைப்பின் தோழர்கள் என 60-க்கும் மேற்பட்ட  தோழர்கள் கலந்து கொண்டு புரட்சி தினத்தில் கொடியேற்றினர்  மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய நிகழ்ச்சியில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form