தியான பயிற்சி முகாம்

 நாட்டு நலப்பணி திட்ட முகாமில் தியான பயிற்சி முகாம்


திருச்சி. அக் 5:                                         திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர்.தயாநிதி நினைவு வித்யாசலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில்,  தியான பயிற்சி  குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பயிற்சி அளித்து பேசுகையில், 


ஒவ்வொரு மனிதரும் அவரவர் வாழ்க்கையில் கற்ற கல்வி, பெற்ற அனுபவம், அனுபவித்த இன்பம், துன்பம் பயம், கவலை, நம்பிக்கை என ஒவ்வொருவரது வாழ்வும் அவரது அறிவு, உணர்வு, செயல், விழிப்பு நிலை போன்ற நிலைகளில் செயல்படுகிறது.  ஒவ்வொருவரும் தன் உண்மையான தன்மையை உள் ஆய்வாக  அறிவதற்கு தியான பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது கற்பனை, உணர்ச்சி கடந்த கால, நிகழ் கால அனுபவங்கள், எதிர்கால திட்டங்கள் என எண்ண அலைகளை கவனிக்க இயலும். உணர்வுகள், உள்ள கிளர்ச்சியால் நாம் எடுக்கும் முடிவும் முயற்சியும் நம்மை எந்த சூழலுக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் புரிந்து கொள்ள இயலும். இதனால் கோபம், ஆசை, எதிர்பார்ப்பு, இன்பம், துன்பம், அகங்காரம், அனுபவங்களை கடந்து அன்பு, அமைதி, ஆனந்தம் என ஒரு நிலைபட்ட தன்மையில் வாழ்க்கையை வாழ இயலும் என்றார்.முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாலசுப்ரமணி வரவேற்க, நிறைவாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார்  நன்றி கூறினார். வரலாறு, வணிக கணிதம், புள்ளியல் மென்பொருளியல் பாடப்பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form