மருதம்பட்டியில் கராத்தே வீரர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழா
திருச்சி, அக்.5-புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் இலுப்பூர் தாலுகா மருதம் பட்டி ஊராட்சி மருதம் பட்டியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஜப்பான் ஜீட்டோ ராய் கராத்தே பள்ளி புரூஸ்லீ கராத்தே பள்ளி நடத்திய மகாத்மா காந்தி தகுதி பட்டை வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ஒன்றிய செயலாளர் மு.பி.ம சத்தியசீலன், மருதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் சி. திருநாவுக்கரசு, துணைத் தலைவர் பி. நாகரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகுதி பட்டை வழங்கினர். மாவட்ட இளைஞர் அணி சிவா விழா ஏற்பாடு செய்திருந்தார். முடிவில் மருதம்பட்டி ச.ரவிசந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சிவதனுசியா ,லோகித் மித்ரன், ஹரிஹரசுதன், பாலநித்திஷ், தீபிகா ,ஆரிஸ்,ஆரியா,கவிஷ்குமார், கமலேஷ் ,தனுஷ் ராஜா,ஞானசேகர்,அஸ்வின் ராஜ்,ராகவன்,சபரிஸ், யுவராஜ் , பிரியாஶ்ரீ ,சீவிகா,சிவானி,பேராம்பூர் மாணவ மாணவிகள் சுவேதா,சுருதிகா,சன்விகா, சஞ்சனாஶ்ரீ,லோகேஷ்வரன்,தானியஶ்ரீ ,அபிசேக்குளத்தூர் மாணவ மாணவிகள் மேஹாவர்ஸ்ன, ம.தீபிகா நடுவர்கள் தேவிகா, ஹரி கிருஷ்ணன் ,மோனிஷா, அனுஶ்ரீ , ராகுல் ,வாணி,அகிலேஷ். மதுரை பழனி ,ரகு, ஈஸ்வரன் ,மருதவிஷ்னு , சின்னதுரை ,அருள்பகவதி, கராத்தே மாணவர்கள் வெற்றிவேல், வேதேஷ், சர்வேஷ்,ஹரிஸ்லி, ஹரிஷ் ஆகியோருக்கு தகுதி பட்டை வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்டை வழங்கிய போது எடுத்த படம்.