ஶ்ரீரங்கம்கோவில்அறங்காவலருக்கு எதிர்ப்பு பக்தர்கள் திடீர் போராட்டம்
ஜீலை.4- திருச்சிருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்யவும் ,சுவாமி ராமானுஜர் காட்டிய வைணவ மத நெறி முறைகள், பழக்கவழக்கங்களை காத்திடவும் அறங்காவலர்களாக உள்ளூரை சேர்ந்தவரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவரங்கம் கோவிலின் பக்தர்களின் ஒரு பகுதியினர் வொள்ளைக்கோபுரம் அருகே " உடையவர் இராமானுஜர் உருவாக்கிய பத்துகொத்து முறையை நாசமாக்காதே!வேணு சீனிவாசனை அகற்று! "என்ற வாசகங்களுடன் கூடிய பேனர்களுடன் திடீரென பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேனர்களை கையில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர் இதற்கிடையில் தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பக்தர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறிது நேரம் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் . திடீரென வெள்ளை கோபுரம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியது திருவரங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.