கண்டு கொள்வார்களா மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்,
திருச்சி ஏப்.12: தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மாநகராட்சி பணிகளில் முதலிடம் பிடித்து விருதுகள் வாங்கியது பெருமையாக இருந்தாலும்,
முக்கிய பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால் ,ஒட்டு மொத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது அந்த வகையில் திருச்சி மீன் மார்க்கெட் வாழைக்காய் மண்டி காந்தி சிலை அருகே உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வெல்லம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் சாலைகள் பழுதடைந்து சாலைபுரம் கற்களாக காட்சியளிக்கிறது மேலும் குழாய் உடைந்து 15 நாட்கள் ஆகியும் தொடர்ந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரியிடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து சாலை சீரமைத்து பொதுமக்கள் சிரமம் என்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்,
உடனே நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள்?