இஸ்லாமிய மார்க்க கடமையை நிறைவேற்ற ஆர்வமூட்டி சைக்கிள் வழங்கப்பட்டது,
திருச்சி உக்கடை அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள மக்கா மஸ்ஜித் மற்றும் நூருல் ஹுதா மக்தப் மதரஸா சார்பில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையை நிறைவேற்றுவதற்கு குறிப்பாக அதிகாலை ஃபஜ்ர் தொழகையை பள்ளிவாசலுக்கு
தொடர்ச்சியாக மூன்று மாதம் வந்து நிறைவேற்றக் கூடியவர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் மூன்று மாதங்கள் தொடர்ந்து யார் ஃபஜ்ர் தொழுகைக்கு விடாமல் வந்த ஆறு மாணவர்களுக்கு ஆர்வ மூட்டும் வகையில் சைக்கிள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் நோன்பு திறப்பதற்காக வேண்டிய எல்லா வேலைகளையும் ஆர்வமுடன் செய்த வாலிபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது,
மேலும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு இறைவழிபாட்டை ஆர்வமூட்டவும், அவர்களை நல்வழிப்படுத்திடவும்
இது போன்ற பரிசுகளை கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்திட இது போன்ற முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தனர்