செங்கோட்டை செல்ல திருச்சி மலைக்கோட்டையில் இருந்து தேர்தல் பிரச்சாரம்
திருச்சி, மார்ச், 30: திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
அதைத்தொடர்ந்து சின்ன கடைவீதி, சவுக்கு,பாபு ரோடு, வடக்கு,தெற்கு ஆண்டாள் வீதிகள் தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்துஉற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளர்கள் குமார்,சீனிவாசன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், கவுன்சிலர் அரவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.