புதுக்கோட்டையில் வாக்கு சேகரித்த வேட்பாளர் கருப்பையா ஆராத்தி தட்டுடன் வரவேற்ற பொதுமக்கள்
திருச்சி, ஏப்.1: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினர்,
அங்குள்ள கோயிலில் பக்தர்கள் வழங்கிய நீர் மோர், குடித்து பத்தர்களிடம் வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து பூ மாலை கடையிலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் பெண்களிடமும் வேட்பாளர் கருப்பையா இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகளான அடப்பன் வயல், வடக்கு 3ஆம் விதி, வடக்கு நான்காம் விதி, வ உ சி நகர்,பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை பொதுமக்கள் வேட்பாளர் கருப்பையாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றினர்,