பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்,
திருச்சி, ஜன.2:திருச்சியில் இன்று நடைபெற்று வரும் பன்னாட்டு விமான நிலையத்தின் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ள, நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே சாமானிய மக்கள் நலக் கட்சிகிழக்கு மாவட்ட செயலாளர் சைனி தலைமையில்
மக்கள் நலக் கட்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் மலர்மன்னன், தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ரமணா, புறநகர் மாவட்ட செயலாளர் எரக்குடி ராஜா.மற்றும் தனபால் பொன்னம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தி மழை புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு வருகை தந்த மோடியை திரும்பி போ என்ற கோஷத்தை முழங்கியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,