அமைச்சர் வருவதாக உறுதி

 


திருச்சி, ஜன, 1:                                 தமிழ்நாடு தொகுப்பூதிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநாடு திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில்  நடைபெற்றது.தமிழ்நாடு தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்றது.

தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிக்கோ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அரசு 1991 1992 இல் பணியாற்றிய தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றிய நாட்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கி பனிக்காலமாக மாற்றி கொடுத்தது போல 2003 2006 இல் பணியாற்றிய தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் அவர்கள் பணியாற்றிய நாட்களை பனிக்காலமாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தொகுப்பூதிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க வேண்டும்.

2024 ஜனவரியில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருவதாக உறுதி அளித்துள்ளார் குறைந்தது 5000 ஆசிரியர்களை கூட்டி எங்கள் கோரிக்கை மாநாட்டை நடத்தி கோரிக்கையை முன் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form