வீட்டின் மேற்கூரை இடிந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை கேட்டு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி.
திருச்சி,ஜன, 1: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி ஆகியோருடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்
மேலும் பிரதீபா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் அதேபோல் ஹரிணி,நான்காம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று மாரிமுத்து அவரது உறவினர் இல்ல விசேஷத்திற்காக வெளியூர் சென்றுள்ளார் இந்நிலையில் இரவு அவரது மனைவி மற்றும் அவரது தாயார் இரு மகள்கள் உறங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென அதிகாலை வீட்டின் மேற்கூரை விழுந்துள்ளது,
இதில் உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இதனை அடுத்து இத்தகவலை அறிந்தார் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன் நிவாரணம் வழங்ககினார்.
நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் கார்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உடன் இருந்தனர்
