தேசிய நூலக வார

 56-வது தேசிய நூலக வார விழா என்னுயிரே என்ற இரண்டாவது பதிப்பு நூலை அமைச்சர் வெளியிட்டார்


திருச்சி, டிச,29:                                        திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 56-வது தேசிய நூலக வார விழாவில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், புத்தகத் திறனாய்வில் பங்கு பெற்ற மாணவிக்கு கேடயமும். முத்தோர்களுக்கான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், பொது வாசகர்களுக்கான கதை, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோர்களுக்கு கேடயமும், சதுரங்க பயிற்சியாளருக்கு விருதும், அதிக அளவில் பள்ளி மாணவர்களை நூலக உறுப்பினர்களாக சேர்த்த தூயவளனார் பள்ளி ஆசிரியருக்கு கேடயமும், நூலக நண்பர் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வளர்களுக்கு கேடயமும், ரோட்டரி பீனிக்ஸ் மூலம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் NR IAS அகாடமி இயக்குநர் அவர்களை பாராட்டியும், கலைஞர் நூற்றாண்டு விழா உறுப்பினர் சேர்க்கை முகாமில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகங்களுக்கு கேடயங்கள் வழங்கியும், நன்கொடையாளர்களை சிறப்பித்தும், நூலக வார விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்டும், ஆர்வமுடன் ஒத்துழைப்பும் நல்கிய வாசகர் வட்ட நிர்வாகிகளை கௌரவித்தும், திருச்சி ராயல் லயன் சங்கத்தைச் சேர்ந்த 14 நபர்களை புரவலர்களாக இணைத்தும்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விருதுகள் .பாராட்டு சான்றிதழ் வழங்கி 56-வது தேசிய நூலக வார நிறைவு விழாவில் விழாப் பேருரையாற்றினார்.


முன்னதாக திருச்சி மத்திய சிறையின் மேலாளர் மற்றும் கவிஞர் திருமுருகன் எழுதிய என்னுயிரே என்ற இரண்டாவது கவிதை நூல் அவரது தாயின் அன்பை பற்றி உயிர் எழுத்துக்களை பயன்படுத்தி 50 கவிதைகள் எழுதி உள்ளார்,

இந்நூல் பள்ளி கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களால் வெளியிடப்பட்டு பாரட்டு தெரிவித்தனர்,


மேலும் இன் நூலில் தாயின் அன்பு, அரவணைப்பு, தியாகங்கள், பற்றி கவிதையாக கூறியிருப்பது வாசகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,இந்நூலை எழுதிய அவருக்கு வாசகர் வாழ்த்து தெரிவித்தனர்

இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், மாவட்ட மைய நூலக அலுவலர் சிவக்குமார், மத்திய சிறை மேலாளர் திருமுருகன் மண்டல தலைவர் மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form