தமிழ் தேசத்தின் ஏதிரி யார்? நூல் வெளியிட்டு விழா,
திருச்சி, டிச, 19: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழ் தேசத்தின் ஏதிரி யார்? நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது,
இதில் தமிழ் தேச மக்கள் முன்னணியின் வழக்குரைஞர் கென்னடி, தலைமை தாங்கினார்,
சிறப்பு அழைப்பளர்களாக தமிழ்நாடு முற்போக்குப் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில துணைத்தலைவர் செல்வராஜ், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிறப்பு விருத்தினராக தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர். பானுமதி,கலந்து கொண்டு நூல் வெளியீட்டு வாழ்த்துரையாற்றினார்,
நாளை விடியும் மாத இதழ் ஆசிரியர்.அரசெழிலன், தமிழ்வழிக்கல்வி இயக்கத்தின் சின்னப்பத் தமிழர்,தமிழக மக்கள் முன்னணியின் தென்மொழி ஈகவரசன்,திராவிடர் விடுதலை கழகத்தின் புதியவன்.தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கமலக் கண்ணன்,மக்கள் தமிழகம் கட்சி செகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் செயராமன்,ஏற்புரையாற்றினார்,
விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர், தமிழாதன்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மணிவண்ணன்,தலித் விடுதலை இயக்க தலைவர் தலித் கருப்பையா,தந்தை பெரியார் திரவிடர் கழக மாநில பரப்புரைச் செயலாளர்.சீனி விடுதலை அரசு,திராவிடர் கழக இளங்கோவன்,ஆகியோர் நூல்கள் பெற்று கொண்டு வாழ்த்தினர்
மக்கள் தமிழகம் கட்சி தலைவர் நிலவழகன் நிகழ்சியை ஒருங்கினைத்து தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் தந்தை பெரியார் கழக வின்சென்ட் ஜெயக்குமார் நன்றி உரையாற்றினார்.




