பேராசிரியர் அன்பழகன் 102-வது பிறந்தநாள் விழா- திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, டிச,19: திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
இந்நிகழ்வில் மாநகர அவைத் தலைவர் ராமலிங்கம், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் முத்து செல்வம், அள்ளூர் கருணாநிதி, விஜய ஜெயராஜ், மாநகர துணை செயலாளர் பாலமுருகன், டோல்கேட் சுப்பிரமணி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..