திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் ரெஜினா அரங்கத்தில் சுமார் 70 எழுபது மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,
மாணவியர்களுக்கான குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சி, சி,சி ஆரம்ப நிகழ்ச்சியில் .கல்லூரியின் முதல்வர் இசபெல்லா அறிவுறுத்தலின்படி, அலுவலக ஒருங்கிணைப்பாளர் .வித்யா தலைமையில் உதவி பேராசிரியர்
முனைவர் ஜனனி முந்நிலையில் சுமார் 70 (எழுபது) மாணவிகளுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்ற
இதில் சிறப்பு விருந்தினராக நுகர்வோர் பாதுகாப்பு குடிமக்கள் நலச்சங்கத்தலைவர்கோவிந்தராஜ்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்
நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய முக்கிய உரிமைகள் எங்கு? யாரால், எந்த நாட்டில் எந்த ஆண்டில் யார் முன்வைக்கப்பட்டு நிறைவேற்ற பட்டது.போன்ற விபரங்களை தெளிவாக விவரித்தார்.மேலும் நுகர்வோர் யார்? நுகர்வோர் உரிமைகள் எத்தனை? நுகர்வோர்களின் கடமைகள் பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்து தெளிவாக விவரித்தார்.மேலும் நுகர்வோர் பொருட்கள் வாங்கும்போது விழிப்புடன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் தர சான்றிதழ். முத்திரை பதிப்பு, தயாரிப்பு தேதி மற்றும் காலவதி தேதி ஆகியவை பதியபட்டுள்ளதா? என்பதை பற்றியும் எடைக்கல், தராசு தற்போதைய இயந்திர எடை மிஷின் போன்றவைகளில் தவறான வணிக வியாபாரம் நடைபெறுவது குறித்து விளக்கம் அளித்து நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்கவேன்டும் என்று அறிவுறுத்தினார்.
மாணவியர்கள், மற்றும் ஆசிரியைகள் அனைவரும் ஆரவார கற ஒலி எழுப்பி கௌரவித்தனர்.
இறுதியில் முனைவர் ஜனனி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது