திருச்சி அரசு மருத்துவமனையில் செத்து கிடக்கும் நாய் அப்புறப்படுத்தப்படுமா?
திருச்சி,ஜன,11: திருச்சி அரசு தலைமை மருத்துவமனை உள்ளே உள்ள பிரசவ வார்டு வெளிப்புற பகுதியில் சாலை ஓரம் சுற்றி திரியும் நாய் ஒன்று செத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் உள்ளனர்,இது பற்றி மருத்துவமனையில் ஊழியரிடம் புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை,பிரசவ வார்டு என்பதால் இங்கு சிறு குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் வந்து போவதும், தங்கியும் உள்ளனர்.
நாய் செத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை அப்புறப்படுத்தாமல் துர்நாற்றத்துடன் செத்து கிடைக்கின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி நோய்கள் பரவாமல் பாதுகாக்க வேண்டும் என அங்கு உள்ளவர்கள் கூறுகின்றனர்