தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி, ஜன, 11: திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 13/1/2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது,
இவ் வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்கள் பணி வாய்ப்புகளை வழங்க உள்ளன,
இந்த வேலைவாய்பு முகாமில் 10,12, ம் வகுப்பு,ஐ,டி.ஐ.டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்,
வயது வரம்பு 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்,
இந்த முகாமின் நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல் சுய விவரம் குறிப்பு நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்,
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 13/1/2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.