திருச்சியில் 1300 விதிமீறல் வழக்கு பதிவு

 


போக்குவரத்து விதி மீறல்கள் அதிரடி நடவடிக்கை1300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,


திருச்சி, ஜன,7:                             திருச்சியில் வாகன விபத்துகளை தடுப்பதற்கும் மற்றும் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தியும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தியும் வருகின்றனர்,


இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சத்திய பிரியா,தலைமையில் காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியும், போக்குவரத்து நெரிசல் தடுப்பதற்கும், மற்றும் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தியும்,பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்,



அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாநகர பகுதிகளில் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் திருச்சி மாநகரில் 44 இடங்களில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு சரகம் நேரடி மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களால் வாகன தணிக்கை செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர்,



இதில் தலைக்கவசம் அணியாமல் வந்த 804நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ 8.04,000/_தொகையும் காரில் சீட் பெல்ட் அணியாமலும் வந்த 108 நபர்கள் மீது ரூ,1.08,000/_அபராத தொகையும் அதிவேகமாக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி வந்த 9 நபர்கள் மீது ரூ 9000/தொகையும்,செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் வாகனம் ஓட்டி சென்ற 49 நபர்களுக்கு ரூ 49,000/_தொகையும் ஓட்டுனர் உரிமமின்றி வாகனம் ஓட்டியவர்கள் 7 நபர்களுக்கு ரூ 35,000/-தொகையும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் சென்றதில் 72 வழக்குகள் பதிவு செய்து ரூபாய் 72,000/_மற்றும் இதர வாகன விதிமீற வழக்குகள் 266வழக்குகளுக்கு ரூ,1,51,000/தொகையும் மொத்தம் இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து விதி மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 1331 நபர்கள் மீது 1331 வழக்குகள்பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூ12,99,000/வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




மேலும் சாலை விதிகளை மதித்து நடப்போம் தலைகாவசத்தை அணிந்து வாகனத்தை ஓட்டுவோம்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம்,உள்ளிட்ட உறுதிமொழிகளும் வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்,

திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து இடையூயின்றி சீராக இயங்குகவும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form