திருச்சி, ஜன, 7:விரராக்கியம் - மாயனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பொறியியல் பணிகளை கருத்தில் கொண்டு, கரூர்- திருச்சிராப்பள்ளி பிரிவில். 08.01.2023 அன்று ரயில் சேவைகளில் மாற்றங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன: -
1. ரயில் எண்.16844 பாலக்காடு டவுன் – திருச்சிராப்பள்ளி ரயில் 08.01.2023 கரூர் - திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். பாலக்காடு டவுனில் இருந்து கரூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கரூர் முதல் திருச்சிராப்பள்ளி வரை இயக்கப்படாது.
2. ரயில் எண்.06809 திருச்சிராப்பள்ளியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி. - ஈரோடு ரயில், 08.01.2023 அன்று 1 மணி நேரம் தாமதமாக திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும்.
3. ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் ரயில் 08.01.2023 அன்று 1 மணிநேரத்திற்கு வழித்தடங்களில் பொறியியல் பணிகளுக்கு ஏற்றார் போல் தாமதமாக செல்லலாம்.


