திமுக அரசை கண்டித்து திருச்சியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
திருச்சி, டிச,13: திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் அரசின் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்தும்,
கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாத செயலைக் கண்டித்தும்,கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்,
இந்த மாநில அறிவிப்பினை ஏற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஶ்ரீரங்கம் பகுதி அஇஅதிமுக சார்பில் இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஶ்ரீரங்கம் பகுதி அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. கலந்துகொண்டு கண்டண உரையாற்றினார்,
அதில் திமுக அரசு பாமர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு,பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களை புறக்கணிப்பது போன்ற செயல்களில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கண்டன உரையாற்றி கண்டன கோஷங்கள் எழுப்பினர்,
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஶ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன், தலைமையிலும், அழகு அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் பிரியா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவரணி செயலாளர் கண்ணதாசன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் அன்னை கோபால், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பாசறை செயலாளர் விவேக், ஒன்றிய கழக செயலாளர்கள் நடராஜ், ஜெயக்குமார், முத்துக்கருப்பன், செல்வராஜ், ஜெயராமன், பேரூராட்சி கழக செயலாளர் செந்தில்குமார், திருவானைக்காவல் பகுதி கழக செயலாளர் டைமண்ட் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் ரவிசங்கர், நடேசன், மருதை, திருவேங்கடம், அரவிந்த், திருப்புகழ் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், மகளிரணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.