திமுக அரசை கண்டித்து தில்லை நகர் பகுதி சார்பில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி,டிச, 13: திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் அரசின் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்தும்,
கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தும் அவற்றை நிறைவேற்றாத செயலைக் கண்டித்தும்,கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்,
இந்த மாநில அறிவிப்பினை ஏற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சி தில்லை நகர் பகுதி அதிமுக கழக செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா,தலைமையில் பகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஆண்கள் பெண்கள் என உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்,



