2022.23ம்கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பு.
திருச்சி, நவ,29:
"மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடி, ஐஐஎம், ஐஐஐடி என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மபினர் இன மாணவ, மாணவிகள் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை (Fresh applications) விண்ணப்பித்தல்"
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடி, ஐஐஎம், ஐஐஐடி என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிறபடுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளாது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022:23 கல்வியாண்டில் புதியது(Fresh upylticiations) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மானவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுமலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அனுகியோ அல்லது
https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes
என்ற இனையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மேற்படி 2022, 23 நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும்,
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்காம். எழிலாம் இணைப்பு கட்டடம், 2வது தலம், சேப்பாக்கம், சென்னை5. தொலைபேசி எண்: 344-29515942 மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வருகின்ற 31/01/2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.