தூய்மை பணியாளர்களுக்கு கோரிக்கை

 தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்கவில்லை,


திருச்சி, நவ,29:                                தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்,

அந்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் 2013ல் பணி அமர்திய துப்புரவு பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கவில்லை மேலும் கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு வழங்க உத்தரவிட்ட ஊக்கத் தொகையும் கிடைக்கவில்லை,


பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மாத சிறப்பு ஓய்வூதியம் வழங்குவதில்லை, உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாகவும்,துப்புரவு பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்,

இதில் திருச்சி மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய துப்புரவு பணியாளர்கள் காவலர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form