60 வயது முதியவரை குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்


திருச்சி, நவ,30:                                          மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆதரவற்று இருந்த ராமசாமி (வயது 60 )என்பவரை மகாலெட்சுமி சமூக அறக்கட்டளையின் இயக்குனர் மா. ப .முரளிதரன் அவ்வபோது சிறு உதவி செய்து வந்தார். அந்நேரத்தில் நலச்சங்க தலைவி சுல்தானா பேகம் அந்த முதியோருக்கு போர்வை ஆடைகள் கொடுத்து உதவி செய்தார். அதேபோல் அம்மன் டீ ஸ்டால் உரிமையாளர் s.எஸ் சுப்பையா என்கின்ற சுரேஷ் ஆகியோர் உதவி செய்து வந்த நிலையில் நாளடைவில் முதியோருக்கு மிக உடல் நலம் குன்றி இருந்ததால் 108 உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறக்கட்டளையின் சார்பாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் நான்கு நாட்கள் முழுவடைந்து இன்று அவருடைய இல்ல முகவரியை கண்டுபிடித்து மகன் தர்மர், மகள்கள் அம்சவல்லி,  பிரியா, ஆகிய குடும்ப உறவுகளுடன் சேர்க்கப்பட்டார். 


இல்லத்திலிருந்து பிரிந்து வாடிய ராமசாமி ஐயாவிற்கு மகன் மகள்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தார். ராமசாமி ஐயாவே இல்லத்தில் சேர்க்கப்பட்டதை எண்ணி மகாலட்சுமி சமூக அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form