ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் திருச்சியில் நடைபெற உள்ளது
திருச்சி,நவ,29:
திருச்சீராப்பள்ளி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 04 ம் தேதி வரை வாசக்டமி இருவார விழா-2022 கடைபிடிக்கப்படுகிறது. பயிற்சிபெற்ற மருத்துவ நிபுனர்களால், இக்கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது இச்சிகிச்சையானது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமவகைளிலும் மற்றும் மேற்படுத்தப்பட்ட அரசு வட்ட சுகாதார நிலையங்களிலும் நடைபெற உள்ளது.
நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100ம், ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 ம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இச்சிகிச்சையானது ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும் சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடித்த பிறகு வீட்டிற்க்கு செல்லலாம் கத்தியின்றி ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின் விளைவுகள் எதுவும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்ப நல கருத்தடை செய்துகொண்டு பயன் பெறலாம் என துணை இயக்குநர், குடும்பநலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முகாம் நடைபெறும் இடம்: மாநகராட்சி நகர்நல மையம், உறையூர். நாள்: 03/12/2022(சனி கிழமை) மற்றும் 05/12/2022(திங்கள் கிழமை)
மேலும் தொடர்புக்கு குடும்பநல அலுவலகம் 0431-2460695
மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மாவட்ட ஆட்சியரகம், திருச்சி 94432 46269 தொடர்பு கொள்ளவும்