திருச்சி, நவ,11: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம்களில் கழக நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் – 1,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்காக நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் – 2 வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் -3 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 51வது ஆண்டு தொடக்க விழா தருணத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி மீண்டும் மாண்புமிகு. கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைந்திட அனைவரும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம்.ஆகிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், நடராஜன், முத்துக்கருப்பன், L.ஜெயக்குமார், ஆமூர் ஜெயராமன், ஆதாளி, ராஜமாணிக்கம், ஜெயக்குமார் பால்மணி, பிரகாசவேல், ஜெயம் குமரவேல், சேனை செல்வம் அழகாபுரி செல்வராஜ், வெங்கடேசன், ராம்மோகன், நகர கழக செயலாளர்கள் அமைதி பாலு, சுப்பிரமணியன் பேரூராட்சி கழக செயலாளர்கள் சம்பத், துரை சக்திவேல், செந்தில் குமார், திருஞானம், ராமச்சந்திரன், சுப்ரமணியன், கிட்டு, ராஜேந்திரன், ராஜாங்கம், பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி, சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநாவுக்கரசு மற்றும் ஶ்ரீரங்கம் ரவிசங்கர், ஏகாம்பரம், வட்ட செயலாளர்கள் செல்வம், கலைமணி, பொன்னர், மகேஸ்வரன், மனோகரன், ராஜ், பிரகாஷ், தமிழரசன், கொளஞ்சி, செந்தில்குமார், சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.