அதிநவீன தொழில்நுட்ப இயந்திரத்தின் மூலம் கண் சிகிச்சை முகாம்

 அதிநவீன இயந்திரத்தின் மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது,


திருச்சி,நவ, 15:                                  மகாத்மா கண் மருத்துவமனை மற்றும் தங்கமயில் ஜீவல்லரி இணைந்து இலவச மருத்துவ முகாம் திருச்சி கோஹீனூர் திரையரங்கு ஏதிரே உள்ள ஐ.எம்.எ.ஹாலில்  நடைபெற்று, இந்த முகாமில் மகாத்மா மருத்துவமனையின் மருந்துவர்கள் ரமேஸ்,மீனாகுமாரி, ஆகியோர் தலைமை வகித்தனர்,


இந்த முகாமை தங்கமயில் ஜீவில்லர்ஸ். முதன்மை இயக்க அலுவலர் விஸ்வநாராயன், தொடங்கி வைக்கி முகாம் சம்மந்தபட்ட ஆலோசனைகள் கூறினார்,


மேலும் அதிகமா கிராமப்புறங்களில் நடத்தி வந்த இது போன்ற முகங்கள் தற்போது திருச்சி.மாநகரப் பகுதிகளிலும் நடத்த உள்ளோம்,


மகாத்மா கண் மருத்துவமனையுடன் இணைந்து தங்கமயில் ஜுவல்லர்ஸ் வரும் காலங்களில் மக்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது,

ஒரு லட்சத்திற்கும் மேற்கொண்ட முகாம்கள் நடைபெற்றுள்ளது ,குடும்பத்தில் உள்ள தாய் தந்தையர் குழந்தைகளின் கண்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள பிள்ளைகளுக்குஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்,


ஒவ்வொருவரும் செய்யும் வேலையை பொறுத்து அவர்களின் கண் பாதிப்புகள் ஏற்படுகிறது, சிறு குழந்தைகள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதால் அந்தப் பிள்ளைகள் நீண்ட நேரம் செல்போன் திரையை பார்ப்பதால் ,சிறுவயதிலேயே கண் கோளாறு பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவே பெற்றோர்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்,

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,


இந்த மருத்துவ முகாமில் உயரிய தொழில்நுட்பத்தை கொண்ட இயந்திரம் மூலம் துல்லியமாக கண் பரிசோதனைசெய்யப்பட்டு அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. என தெரிவித்தனர்,


இந்த மருத்துவ முகாமில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகள் கழகத்தின்,தேசிய ஒருங்கிணைப்பாளரும் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்எ. தாமஸ், மற்றும்வழக்கறிஞர் கார்த்திகா. அல்லிக்கொடி,பிரபு, சுந்தர், மணி, கார்த்திகேயன், பார்த்திபன், மைக்கேல், அனுஷ்கா, நந்தினி,உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டு முகாம் காண உதவிகளை செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form