நல்லொழுக்க பயிற்சி

 ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தலைமை சார்பாக விழித்தெழு தோழாஎன்ற தலைப்பில் நல்லொழுக்க பயிற்சி  நடைபெற்றது.


திருச்சி, நவ,15:                                       திருச்சி மாவட்ட டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தலைமையின் சார்பில் நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது,


இந்த பயிற்சி வகுப்பில் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள்கலந்து கொண்டனர், மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த வகுப்பில் உங்களில் சிறந்தவர் என்ற தலைப்பில் சுல்தான் இப்ராஹிம், நிதானம் வாழ்க்கைக்கு பிரதானம்என்ற தலைப்பில் சேப்பாக்கம் அப்துல்லா, ஆகியோர் பயிற்சி அளித்தனர்


அதை தொடர்ந்து மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனரீதியான பயிற்சியும் உடல் ஆரோக்கியம் உடல் உறுப்புகளின் பாதுகாப்பு குறித்த மார்க்கம் சார்ந்தும் உளவியல் ரீதியாகவும் மருத்துவம் சார்ந்தும் மருத்துவர் உசேன் பாஷா, பயிற்ச்சி அளித்தார்,


மேலும் இன்றைய சூழ்நிலையில் அரசியல், ஆன்மிகம், சங்கம், அமைப்புகள் ஆகிய நிர்வாகம் எந்த சூழ்நிலையில் உள்ளது எப்படி இயங்குகிறது நிர்வாகம் என்றால் என்ன அதை சீர்திருத்தம் செய்யும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து மாநில தலைவர் அப்துர் ரஜாக் விளக்கமளித்தார்,

மனிதர்களை நேர்வழிப் படுத்திட இறை வழி என்பது அவசியம் ஒவ்வொருத்தரும் இறை வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இறை வசனம் பற்றிய நினைவு பயிற்சியை இமாம் அலி, கற்றுகொடுத்தார்,

பயிற்சியின் இறுதியாக அறிவாயுதம் ஏந்துவோம் என்ற தலைப்பில் அல்தாஃபி பேசுகையில் இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மது கஞ்சா புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டுள்ளனர், மேலும் சமுகத்தில் சீர்கேடுகள் பெருகி கொண்டுள்ளது,

அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை விடா சீர்கேடுகள்  உள்ள திரைப்படங்கள் நாடகங்கள் பாடல் வரிகள் இப்படி அனைத்திலும் ஏதாவது ஒருவகையில் ஆபாசத்தையும் நாகரிகமற்ற வார்த்தைகள்  இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வார்த்தைகள் என இனைய வழிமூலம்  சமூகத்தை  ஒரு சிலர் வருமாணத்திற்க்காக சீர்கெடுத்து கொண்டுள்ளனர், என்பது மறுக்க முடியாத உண்மை,


எனவே யார் விழிப்புணர்வு கொடுத்தாலும் அவனிடம் இறைவனின் பயமும் பக்தியும் இல்லை என்றல் அது பயன் அளிக்காது, என்பதை உணர்ந்து அறிவு என்னும் சிறந்த ஆயுதத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல மனிதர்களாக நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என பேசினார்.

இதில்,ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இந்த பயிற்சியின் முடிவில் ஐ.ஷேக் நன்றி கூறினார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form