திருச்சியில் கார் தீ பற்றியதால் பரபரப்பு

 அரியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு தனியார் வங்கி ஊழியர் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


திருச்சி, நவ, 15:                                      திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் வசித்து வருபவர் தளபதி ராஜேஷ் (40) இவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று மாலை சுமர் 6.30. மணியளவில் அவர் திருவெறும்பூரிலிருந்து தன் மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அரியமங்கலம் ஆயில் மீல் பஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது அவர் காரின் முன்பக்கத்திலிருந்து புகை வரத்தொடங்கி உள்ளது. ராஜேஷ் காரை விட்டு இறங்கி பார்ப்பதற்குள் புகை வந்த பகுதியிலிருந்து தீ வர தொடங்கியது. 


தொடர்ந்து தீப்பற்றி கார் முழுவதும் எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 


இச்சம்பவத்தால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ பரவ தொடங்கியதும் உடனடியாக தளபதி ராஜேஷ் தன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு காரை விட்டு சிறிது தூரம் சென்றதால் 


யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் எரிந்த வீடியோ திருச்சி முழுவதும் வாட்ஸப்பில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form