திருச்சி, நவ,28: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது இந்த குறைதீர்ப்பு முகாமை முன்னிட்டு பா.ஜ.க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்,
அந்த மனுவில் மலைக்கோவில் அருகில் புதிதாக வர உள்ள கேரளா மெஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி உணவகம் வர உள்ளது இந்த உணவகம் கோயில் மிகவும் அருகில் உள்ளது இந்த மாட்டிறைச்சி உணவகத்தால் பிரதோசம் மற்றும் தேர் உலாவரும் நாட்களில் மிகவும் இடையூறாக பக்தர்களுக்கும் சிவனடியார்களுக்கும் இருப்பதால் இந்த மாட்டிறைச்சி உணவகத்தை தடைசெய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் தொல்பொருள் இயக்குனர் அவர்களுக்கும் மனு கொடுக்கபட்டது இதில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன் மண்டல் தலைவர்கள் பாண்டியன் செந்தில்குமார் மாவட்ட நிர்வாகிகள் சந்துரு ஜெயந்தி மணிமேகலை மற்றும் மனோகரன் வேங்கூர் கார்த்தி காந்திநகர் குமார் ராம்கி கருப்பையா காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்