திருநங்கைகள் சுயதொழில் தொடங்க மானியம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி, நவ, 11: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பம் செய்யலாம் என நிதியாண்டில் ரூ.50,000/- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.
இதில் விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் துவங்க உள்ள தொழில் தொடர்பான கருத்துரு மற்றும் உரிய விலைப்புள்ளிகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு 25.11.2022-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
.

