சுயதொழில் பயிற்சி திருநங்கைகள் பங்கேற்றனர்

 திருச்சி, நவ,8:                                    கோரோட் அறக்கட்டளை சார்பில் திருநங்கையாின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பயிர்ச்சி மற்றும் சமூக அந்தஸ்த்தினை வலுப்படுத்தி பொது வெளி சமூகத்தில் அவா்களின் பங்களிப்பினை உறுதி செய்யவும் அவனுள் அவள் என்ற திட்டத்தினை  லெமன் எயிட் சேர்ட்டி என்ற நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றனர்,


அதன் ஒரு நிகழ்வாக கோரோட் அறக்கட்டளையின் சார்பில் துறையூர் பகுதி திருநங்கையருக்கான திட்ட விளக்கக் கூட்டம்  தனியார் அரங்கில் நடைபெற்றது,


இத்திட்டத்தின்படி திருநங்கையா்களின் கல்வி தகுதி, தனித்திறன்கள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அவா்களின் செயல்திறனை வலுப்படுத்திடவும் அவா்களுக்கு நிலையான வருமானத்திற்கான வழிவகை செய்திடவும்  காேரோட் அறக்கட்டளை சார்பில் அவனுள் அவள் திட்டமானது, அரசு திட்டங்கள், தன்னாா்வலா்கள், சேவை நோக்கில் செயல்படும் பொது நிறுவனங்களின் மற்றும் வா்த்தக நிறுவனங்களின் ஆதரவுடன்  செயல்பட்டு வருகின்றது,


அதன் மூலம் மூலிகை நாப்கின் தயாரிப்பு குறித்து விளக்கத்தை முசிறி பகுதியை சேர்ந்த வள்ளி, மற்றும் மஞ்சள் பை தயாரிப்பு பற்றிய விளக்கத்தை மதுரை மாவட்டத்தை சேர்ந்த கெளரிஆகியோர் மூலம் திருநங்கைகளுக்கான சுய தொழில் முனைவதற்கும் ஆக்கமும் ஊக்கமும் பயிற்சி அளிக்கப்பட்டு சுயத்தொழில் செய்வதற்கானஉறுதி மொழியும் மொழிந்தனர்,

இந்த திட்ட விளக்ககூட்டத்தினை தொடா்ந்து திருநங்கையருக்கு ஒரு வார கால பயிற்சி  வழங்கப்பட்டது,

இந்த பயிற்சியில் திருநங்கையருக்கு தன்னை அறிதல், அவா்களின் மன நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் தொழில் முனைவதற்கான வழி வகைகள் போன்ற விஷயங்கள் பற்றி கலந்துரையாடி அவா்களுக்கு தன்னம்பிக்கையை மேலும் வலுபடுத்த பல்வேறு மாவட்டங்களிலும் அவர்களுக்கான பயிர்ச்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இந்த பயிற்ச்சி வகுப்பில் திருநங்கைருகளின் திருச்சி மாவட்ட துணைத்தலைவி ஹசானா பாத்திமா முயற்சியால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சுய தொழிலாக ஜெராக்ஸ் கடை ஜூஸ் கடை   அமைத்து  சுயமாக தொழில் செய்து சமூகத்தில் அந்தஸ்தை ஏற்படுத்தி  ஒரு முன் உதாரனமாக இருக்ககூடிய திருநங்கை அமிர்தா, அவரின் சுய தொழில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்,

இதில் அப்பகுதி திருநங்கைகள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form