திருச்சி, அக்,25: திருச்சிராப்பள்ளி மாவட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள "நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில்"உள்ள
அனைத்து குடியிருப்பு வாசிகள் வீட்டிற்கு ஒருவர் என்று தாங்களாகவே முன்வந்து குடிசைப் புறத்தில் உள்ள குப்பைகள், புல், பூண்டுகள், சாக்கடை அனைத்தையும் தூர்வாரி தங்கள் சமூக பணியினை மேற்கொண்டு தூய்மையாக வைத்துக் கொண்டனர்.
மேலும் அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு தங்கள் சமூக பணியை இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் *"சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம்" என்று உறுதிமொழியும் எடுத்தனர்,
இதில்,மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் அ.ரெ.செல்லக்குட்டி கலந்துகொண்டார்,