அன்பில் மகேஷ் பெய்யாமொழிஅழைப்பு!

திருச்சி, அக்,27:                                      மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !


திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 28.10.2022  மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் நவம்பர் 4ஆம் தேதி  திருச்சிக்கு வருகை தரும் கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில்   மாநில,மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்  .

அன்பில் மகேஸ் பொய்யாமொழி,மாவட்ட கழக செயலாளர்,பள்ளி கல்வித்துறை அமைச்சர்,திருச்சி தெற்கு மாவட்ட தி. மு. க.

Post a Comment

Previous Post Next Post

Contact Form