திருச்சி, அக்,25: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருவதால் பாதாள சாக்கடை குழாய் புதைப்பதற்காக தோண்ட பட்டகுழிகள் சரிவர மூடாப்படாத காரணத்தால் பல பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ளது,
இதனால் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே சேற்றில் மாட்டிக் கொள்கிறது, மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்
இது போன்று இன்றுதென்னூர் அண்ணா நகர் ஐந்தாவது கிராஸில் உள்ளதபால் சேவை கிளை.அலுவலகத்திலிருந்து தபால்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் சேற்றில் மாட்டிக் கொண்டது இதனால் அந்த வழியாகமற்ற வாகனங்கள் செல்ல முடியாத சூல்நிலை ஏற்ப்பட்டது அதன் பின் மற்றொரு தபால் வேன் மூலம் அந்த வண்டி மீட்கப்பட்டது,
பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர்கள் முறையாக குழியை மூடுவதில்லை இதனல் வாகன ஓட்டிகள் பாத சாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் சிலர் குழிக்குள்ளேயும் விழுந்து விடுகின்றனர், பாதாள சாக்கடை திட்டப் பணியாளர்களின் அலட்சியத்தால் பலர் பாதிக்கப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்று நடைபெறாமல் பணியாளர்கள் பணிகளை சரியாக செய்கிறார்களா எனவும் பார்வையிட்டுபணிகளை சரிவர செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜங்ஷன் பகுதி செயலாளர்,ரபீக் தெரிவித்தார்