தேர்வு கட்டணம் உயர்வு கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்

திருச்சி, அக், 19:                    திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி  கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல்.


திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு  தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து  இந்திய மாணவர் சங்கத்தினர்  சாலை மறியல் செயல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள  அரசு கலை கல்லூரியில்  உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை திரும்ப பெற வேண்டும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு உண்டான தேர்வு கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து மாணவ மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு  தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி தஞ்சை சாலையில் சாலை மறியலில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டதால் காலை 10:15 மணியிலிருந்து 10.30மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது,


இதில் இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார்.மாணவர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்  கல்லூரி மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். சாலை மறியல் தகவல் அறிந்து திருவெறும்பூர் போலீசார் மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் சாலை போக்குவரத்துக்கு  இடையூறு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட கேட்டுக்கொண்டனர் இதனையொட்டி மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரிக்கு முன்பு உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தஞ்சை சாலை சாதாரணமாகவே போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருக்கும் பகுதியாகும் தற்பொழுது தீவாவளி நேரம் என்பதால் அதிக வாகனங்களும் பொதுமக்களும் திருச்சி தஞ்சை சாலையில் சென்ற வண்ணம் இருந்துவருகின்றனர் தற்போது  திடீர் போராட்டத்தில் மாணவ-மாணவிகள் சாலை மறியல் செய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form