சேலம், செப்,29: சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம்.தம்மம்பட்டி பேருராட்சி. பகுதி காந்தி நகரில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக நிலத்தடி நீர் தேக்க தொட்டி இரண்டுகட்டபட்டது,
இந்த தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரபடவில்லை எனவும் இது சம்மந்தமாக மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பத்திரிகையில் செய்திகள் வந்தும் அதிகாரிகள் அலச்சியம் காட்டுகின்றனர் என கூறப்படுகிறது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு இந்த தரைநீர்தேக்க தொட்டியை கொண்டு வர வேண்டும்,
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படுமா? ஏதிர் பார்பில் அப்பகுதி மக்கள்.