திருச்சி, செப்,28: அக்- 2 சமூக நல்லிணக்க மனித சங்கிலி சிறுபான்மை நலக்குழுபங்கேற்கும் தமிழ்நாட்டில் நல்லிணக்கத்திற்கு ஊருவிளைவிக்கும் செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதை எதிர்த்து, ஒற்றுமையை வலியுறுத்தி அக்டோபர்- 2 ம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இணைந்து பங்கேற்க்கிறது.
சமூக ஒற்றுமைக்கு முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை விதைத்து மக்கள் மத்தியில் மதரீதியான பதட்டத்தை பிரிவினையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சங்பரிவார அமைப்புகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமான ஆர்எஸ்எஸ் இயக்கமே மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் தமிழகத்தில் அணிவகுப்பு நடத்துவது என்ற பெயரில் மதவெறி நடவடிக்கைக்கு துவம் போடுகிற செயலிலே ஈடுபடுகிறது. பேரணி என்ற பெயரில் மக்கள் பிளவுபடுத்தும் முயற்சிகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வண்மையாக கண்டிக்கிறது. இச்சக்திகளை முறியடித்து தமிழ் நாட்டில் மக்கள் ஒற்றுமையை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும்.
தமிழக மக்களின் ஒற்றுமையை, மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை, சமூக அமைதியை பேணும் விதமாக அக்டோபர்-2 ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகளால் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருக்கிற சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வோம் என தெரிவித்தனர்,
மேலும் ஜனநாயகத்தின் மீது, மதச்சார்பின்மை மீது, மத நல்லிணக்கத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தில் கரம் கோர்க்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர் மாவாட்ட தலைவர் வின்சென்ட், மாநகர் மாவட்ட செயலாளர் ரபிக் அஹமத், தெரிவித்தனர்