தொடரும் பதவி மோதல் தீர்வு காணப்படுமா? எதிர்பார்ப்பில் இஸ்லாமியர்கள்.
திருச்சி, செப்.16: திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் மூன்று இஸ்லாமிய பள்ளிவாசல் வணக்கத்தளங்கள் உள்ளது,
இதில் தாய் பள்ளி என்று அழைக்கப்படும் கலிஃபா பள்ளிவாசல் ஆரம்பகாலத்தில் அப்பகுதியில் உள்ளவர்களால் நிர்ணயிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்று வந்தது,
இந்தப் பள்ளியில் தெற்கு உக்கடை வடக்கு உக்கடை மற்றும் மலை அடிவரம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி பகுதியில் இருந்தும் இறைவனை வழிபடுவதற்கு இஸ்லாமியர்கள் வந்து செல்வார்கள்,
காலப்போக்கில் இப்பள்ளியில் நிர்வாகத்தில் பிரச்சனை ஏற்பட்டு பதவி மோதல் ஏற்பட்டது இதனால் தனியாக தெற்கு உக்கடையில் ரஹ்மத் பள்ளிவாசல் கட்டப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது,
அதன்பின் வடக்கு பகுதி மலடிவாரமான பகுதியிலும் அஞ்மன் அர்ரஹமத் என்ற பள்ளியும் கட்டப்பட்டது.தற்போது இப்பகுதியில் உள்ள மூன்று பள்ளிவாசலிலும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக நிர்வாக தேர்தல் நடத்தவும் நிர்வாகிகளுக்குள் பதவி மோதல் ஏற்பட்டு வருகிறது,
இந்தப் பதவி மோதலால் பள்ளிக்கு தொழுவதற்க்கு வரக்கூடியவர்கள் மிகுந்த அச்சத்துடன் நிம்மதியின்றி இறைவனை வழிபட வேண்டிய சூழ்நிலை சில கலங்களாகவே இப்பகுதியில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிகிழமையானஇன்று தெற்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில் உள்ள ரஹமத் பள்ளிவாசலில் அதிகமானனோர் தொழுகைக்கு வந்திருந்தனர்.
வழக்கத்துக்கு மாறாக இங்கு பரபரப்பாக இருந்ததால் ரகசிய தகவல் அறிந்த காவல்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பள்ளிவாசலில் தொழுகை முடிந்தவுடன் நிர்வாகத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதங்கள் நடைபெற்றது.வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் அதுவரை பொறுமையாக இருந்த காவல்துறையினர் வழியின்றி பள்ளியில் நுழைந்து சம்பந்தப்பட்ட நபர்களை வெளியே அனுப்பினர்,
மேலும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணும் படி காவல்துறையினர் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்,
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது இருப்பினும் காவல்துறையின் துரித நடவடிக்கையால் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது,
மேலும் வாரத்தில் ஒரு முறை கூடஇறைவனை முழுமையாக நிம்மதியாக வழிபட முடியவில்லை என கூறியும் தொடர்ச்சியாக இந்த பதவி மோதல் நடைபெற்று வருவதாகவும்
ஆண்டாண்டு காலமாக பொதுவான நிர்வாகத் தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகள் தன்னிச்சையாக தேர்தல் நடத்திக் கொள்வதால் இது போன்ற பதவி மோதல்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்,
இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்காதா என பெரும் பாலான இஸ்லாமிய மக்கள் வருத்தத்துடன் பேசிக் கொள்கின்றனர். இந்த பதவி மோதல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.