அரசுப் பள்ளியை தரம் உயர்த்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பில் மனு,
திருச்சி, ஆகஸ்ட், 2: திருச்சி மாவட்டம் 64 வது வட்டபகுதி கேகே நகர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது,இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 820 மாணவர்கள் பயின்று வருகின்றனர்,
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த சுமார் 85 மாணவ மாணவிகளிள் 25மாணவ மாணவிகள் மட்டுமே மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்து உள்ளனர்.இப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தால் அதிகமான மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பிற்கு மேல் மீண்டும் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உள்ளது.மேலும் 820 மாணவர்கள் கொண்ட இப்பள்ளியில் நான்கு கழிப்பறை மட்டுமே உள்ளது அதிலும் இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது,உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மட்டுமே உள்ளார்துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை,கழிப்பறை அருகில் உள்ள சத்துணவு குணத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்,நாற்காலிகள் மேஜைகள் அனைத்தும் பற்றாக்குறையாக உள்ளது,மேலும்சாத்தனூர் கக்கன் காலனி விமான நிலையம் காந்திநகர் உடையான் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள நடுத்தர மக்கள் வாழும் பகுதியாக உள்ளது எனவே இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் தரம் உயர்த்தினால் இப்பள்ளியில் அதிகமான மாணவ மாணவிகள் மேல்படிப்பை தொடர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மாணவர்கள் பயில்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளனர்,