அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் மௌனம் திருவம்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, ஆகஸ்ட், 2: திருச்சி பால் பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது,
இதில்:பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்த சொல்லி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது,ஆனால் தமிழக முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை,
தமிழக அரசின் நில நிர்வாக துறை ஆணையரிடம் இருந்து சர்வீஸ் ரோட்டிற்கு நிலம் காயப்படுத்துவதில் கட்டிடங்கள் இடிபடாமல் இருப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை தயாரிக்கும் படி கடிதம் கடந்த 23/7/2021 அன்று ,திருச்சி மாவட்ட ஆட்சியர்க்கு அனுப்பப்பட்டுள்ளது,
பல மாதங்கள் ஆகியும் இதுவரை சர்வீஸ் சாலைக்கான எந்தப் பணிகளும் தொடங்கவில்லை சர்வீஸ் ரோடு திட்டத்தை முடக்கும் வகையில் வியாபாரிகள் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர்,மேலும் உயர்மட்ட மேம்பாலத்திற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சர்வீஸ் சாலை திட்டத்தை நடை முறைப்படுத்தாமல் உள்ளனர்,
இந்த விஷயத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மௌனமாக இருப்பதும் சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அவரை தேர்ந்தெடுத்த திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களிடையே கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது,
2019-ல் பாராளுமன்ற தேர்தலில் சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுப்பதாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார், முடங்கிக் கிடக்கும் சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்திட தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திட வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் இரு முறை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேற்கொள்ளாததும் வருத்தத்துக்குரியது எனவே சர்வீஸ் ரோடு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி சர்விஸ் சாலை அமைக்க வேண்டும் என திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்,