அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் திருச்சியில் உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் உருவ சிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் அன்பழகன் ஜவஹர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.