தூய்மை விழிப்புணர்வு குறித்த வாகன பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன எல்இடி மின்னணு திரை வீடியோ வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு ,இன்று (15.9.2021) கொடியசைத்துத் தொடங்கி வைத்து, விழிப்புணர்வுப் படக்காட்சியினைப் பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே பிச்சை, மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், ஆகியோர் உள்ளனர்