திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள P.L.A. கிருஷ்ணா inn ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களுக்கு (Covieshield) தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது இந்நிகழ்வில் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn S.P.அண்ணாமலை தலைமையேற்று தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்
கோட்டை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.A.சரவணன், நிகழ்வினை ஒருங்கிணைத்தார் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் Rtn S.நாகராஜன் Rtn.D.ரவீந்திரன் .Rtn.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.V.நாகராஜன் அவர்களின் பரிந்துரையில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பெயிண்டர் .ராஜா அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு பெயின்டிங் பணி செய்தபோது பெயிண்டர் ராஜா கீழே தவறி விழந்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கை மற்றும் கால் அவருக்கு செயலிழிந்து பாதிப்புக்குள்ளானரார்
இவரது தேவையை அறிந்து திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் Rtn.S.P அண்ணாமலை, அவருக்கு சக்கர நாற்காலியை வழங்கினார் பெயின்டர் ராஜாவுடன், அவரது மகள் மற்றும் உறவினர்கள் வந்து சக்கர வண்டியை பெற்று கொண்டு உதவி புரிந்தமைக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர் நிகழ்வில் மருத்துவர் செவிலியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.