செப்டம்பர் 16ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் உலக முடிதிருத்துவோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சங்க தலைவர் சண்முகசுந்தரம், தலைமை தாங்கி கொடியேற்றினார். செயலாளர் ராஜலிங்கம், ஆலோசகர் சுரேஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியல்சங்க கொடி ஏற்றி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சங்கத்தின் தீர்மானமாக கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களையும், ஊராட்சி கிராமப்புற தொழிலாளர்களையும் அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்கவேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். எம்பிசி உள் ஒதுக்கீட்டை இரண்டரை சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் மற்றும் பி.சி.ஆர் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மாரிமுத்து, ஜீவரத்தினம், பிரபாகரன், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.